

இது 6.7 அங்குல அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியாடெக் டைமென்சிடி 900 பிராசஸர் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 25 வாட் சார்ஜருடன் இது வந்துள்ளது. 5-ஜி அலைக்கற்றையில் செயல்படக் கூடியது.
இதில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.23,999. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.25,999. இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும். இதன் பின்புறம் 108 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது.