சாம்சங் கேலக்ஸி டேப்லெட்

புதிய ரக எஸ் 7 எப்.இ. டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 750 ஜி எஸ்.ஓ.சி பிராசஸர் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப்லெட்
Published on

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வரிசையில் புதிய ரக எஸ் 7 எப்.இ. டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஸ்நாப்டிராகன் 750 ஜி எஸ்.ஓ.சி பிராசஸர் உள்ளது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும், டேப்லெட்டில் எழுத வசதியாக எஸ் பேனாவும் கொண்டது.

இது 12.4 அங்குல திரை, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. நினைவகத் திறனை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது. இரண்டு ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 10,090 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 45 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com