

இதில் 43 அங்குல திரை கொண்ட இரண்டாம் தலைமுறை மானிட்டர் அளவில் பெரியதாகும். இதற்கு அடுத்து 32 அங்குலம், 27 அங்குலம் மற்றும் 24 அங்குல அளவில் இவை வந்துள்ளன. ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்தக் கூடியதாக ரிமோட் மூலம் இதை இயக்க முடியும்.
இதில் 10 வாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இத்துடன் சாம்சங் கின் டி.வி. பிளஸ் சேவையும் கிடைக்கும். இதன் மூலம் இந்த மானிட்டர்களில் தேவைப்பட்டால் தொலைக்காட்சி நிகழ்ச்சி களையும் பார்த்து ரசிக்கும் வசதியும் உள்ளது. கூகுள் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் அலெக்ஸா மூலமும் இதை செயல்படுத்த முடியும்.