

இவற்றின் விலை சுமார் ரூ.21 ஆயிரத்திலிருந்து ஆரம்பமாகிறது. இதில் மைக்ரோசாப்ட் 365 செயலி, சாம்சங் டெக்ஸ், ஸ்கிரீன் மிரரிங், ஆப்பிள் ஏர் பிளே 2 உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
இத்துடன் ஓ.டி.டி. தளங்களான நெட்பிளிக்ஸ், யூ-டியூப், ஆப்பிள் டி.வி. உள்ளிட்டவற்றையும் இதில் பார்க்க முடியும். காட்சிகள் தெளிவாகத் தெரியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இதில் பிளிக்கர் பிரீ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட் மூலம் இதை செயல்படுத்தலாம். 27 அங்குலம் மற்றும் 32 அங்குல அளவில் இவை வந்துள்ளன.