யூ.டி.ஐ. எம்.எப். பங்கு வெளியீட்டில் 8.25% பங்குகளை விற்க எஸ்.பீ.ஐ. திட்டம்

பொதுத்துறையைச் சேர்ந்த யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு (எம்.எப்) நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில் தனது 8.25 சதவீத பங்குகளை விற்பனை செய்ய பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ) திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
யூ.டி.ஐ. எம்.எப். பங்கு வெளியீட்டில் 8.25% பங்குகளை விற்க எஸ்.பீ.ஐ. திட்டம்
Published on

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

எஸ்.யூ.யூ.டி.ஐ.

இந்திய பாராளுமன்றம், கடந்த 2002-ஆம் ஆண்டில் யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா சட்டத்தை நிறைவேற்றிய பிறகு யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் யூ.டி.ஐ. நிறுவனம் எஸ்.யூ.யூ.டி.ஐ. எனும் தனிப்பட்ட பொதுத்துறை ஏற்பு நிறுவனமாக மாறியது. இந்நிறுவனத்தின் வாயிலாக மத்திய அரசு பல முன்னணி தனியார் நிறுவனங்களில் பங்குகள் வைத்திருக்கிறது.

இந்திய பரஸ்பர நிதி துறையில் ஒரு காலத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்த யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தில் பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி., பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய பொதுத்துறை நிதி நிறுவனங்கள் தலா 18.5 சதவீத அளவிற்கு பங்கு மூலதனம் வைத்திருக்கின்றன. மீதமுள்ள 26 சதவீத பங்குகள் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான டி ரவ் பிரைஸ் குழுமத்தின் வசம் உள்ளன.

யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் கடந்த 2008-ஆம் ஆண்டிலேயே பங்கு வெளியீட்டில் களம் இறங்க திட்டமிட்டது. அதற்காக செபிக்கு விண்ணப்பமும் அனுப்பியது. ஆனால் சந்தை நிலவரங்கள் மோசமாக இருந்ததால் அப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் பங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனத்தின் வெளியீட்டில் தற்போதைய பங்குதாரர்களின் 30 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இதன் மூலம் ரூ.2,600 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எல்.ஐ.சி.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி புதிய பங்கு வெளியீட்டில் இந்நிறுவனத்தில் இருக்கும் மொத்த பங்குகளில் 8.25 சதவீதத்தை விற்று விட உத்தேசித்து இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதே போன்று எல்.ஐ.சி. உள்ளிட்ட மற்ற பொதுத்துறை நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பனை செய்து விட்டு பகுதி அளவு வெளியேற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com