

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், டிக்டாக் என ஏராளமான சமூகவலைத் தளங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவை தனிநபர்களின் கருத்துப் பகிர்வுக்கான முக்கிய இடமாகவும், சமூக தொடர்புத் தளமாகவும் இருந்தாலும், அவற்றால் ஏற்படும் உறவு முறிவுகள், கவலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
தமது கருத்துகளுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் மனம் வாடுபவர்களைப்போல, நட்புறவை துண்டிக்கும் அன்பிரண்ட், பிளாக் போன்ற வசதிகளை பயன்படுத்துபவர்கள் பெருகி உள்ளனர். அதுபோல தனது முன்னாள் காதலர்/கணவர் போன்ற உறவுகளை பின்தொடர்வதும், தொல்லை தருவது போன்ற நிகழ்வுகளும் சமூகவலைத்தளங்களில் பெருகி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சமூகவலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, அவதூறாக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் குடும்பத்தினர், உறவுகளுக்குள்ளும் பல்வேறு உரசல்களையும், விரிசல்களையும் சமூகவலைத்தளங்கள் உருவாக்கி இருக்கின்றன என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. இது பற்றிய ஆய்வு முடிவுகளை கொலராடோ பவுல்டர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு வெளியிட்டு உள்ளது.