

வித் யுக் என பெயரிடப்பட் டுள்ள இந்த இ-பைக் 80 கிலோ எடை கொண்டது. சோலார் சார்ஜிங் மூலம் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் 80 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும். இதில் ஸ்ட்ரோக் என்ஜின் இல்லை. அதற்கு பதிலாக டி.சி. ஹப் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜி.பி.எஸ்., மொபைல், வாக்கி டாக்கியை சார்ஜர் செய்யலாம். இதன் முகப்பு பகுதியில் இருக்கும் உயர் சக்தி கொண்ட ஹெட்லைட்டை டார்ச்சாகவும் பயன்படுத்தலாம்.
குத்ரேமுக் தேசிய பூங்காவில் பணி புரியும் வனத்துறை அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் பரிசோதித்து பார்ப்பதற்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வனவிலங்கு களுக்கு இடையூறு இல்லாமல் வனப்பகுதியில் பயன்படுத்துவதற்கு ஏற்றது. ஏனெனில் என்ஜினில் இருந்து சத்தம் எதுவும் வெளிப்படாது. தேசிய பூங்காவை சுற்றியுள்ள வனப்பகுதியில் வேட்டையாடுதல் மற்றும் திருட்டு நடவடிக்கைகளை தடுப்பதற்கு சிறந்த முறையில் பயன்படுத்தப்படலாம் என்கிறார்கள், இந்த சோலார் மோட்டார் சைக்கிளை வடிவமைத்த மாணவர்கள்.
இதுபற்றி என்.ஐ.டி.யின் பேராசிரியர் பிருத்வி ராஜ் கூறுகையில், கொரோனா பொது முடக்கத்தின்போது எம்.டெக் மற்றும் பி.எச்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான வடிவமைப்பு இது. இரும்பு கம்பிகள் உள்பட உள்நாட்டு பொருட்களை கொண்டே இந்த மோட்டார் சைக்கிளை தயாரித்து இருக்கிறார்கள். குத்ரேமுக் வனத்துறை நிதி உதவி அளித்திருக்கிறது. அதனால் வனத்துறையினரின் பயன்பாட்டுக்கு ஏற்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது பெண் வனக்காவலர்கள் மற்றும் துணை ஆர்.எப்.ஓ. அதிகாரிகள் பயன்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் உயரத்தை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோட்டார் சைக்கிள் உருவாக்கத்திற்காக எங்கள் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மொத்தம் ஐந்து இ-பைக்குகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம். வனத்துறையினர் சோதனை ஓட்டம் நடத்திய பிறகு அவர்களின் கருத்துக்கு ஏற்ப மோட்டார் சைக்கிளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்கிறார்.