மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்..

தற்போது வளர்ந்து வரும் மருத்துவத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை நோய்களிலிருந்து பாதுகாத்து ஆயுளை அதிகரிக்க உதவுகிறது.
மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்..
Published on

இந்த பூமியில் மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் என்ன என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்வோம்.

ஆமையின் ஆயுள் காலம்

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுள் காலம் உள்ளது. உயிரினங்களின் சராசரி ஆயுள்காலம் அவற்றின் உடல் அமைப்பு, வாழும் சூழல் மற்றும் வளர்சிதை மாற்றத்தைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக ஆமை இனங்களின் ஆயுள்காலம் 80 முதல் 200 ஆண்டுகள் வரையும், பாம்பு இனங்களின் ஆயுள்காலம் 10 முதல் 25 ஆண்டுகள் வரையும் உள்ளது.

மனிதனின் சராசரி ஆயுள் காலம்

இதேபோல் உலகளவில் மனிதனின் சராசரி ஆயுட்காலம் 70 முதல் 75 ஆண்டுகள் என்றும், மனிதனின் மரபியல், உணவுப் பழக்கம், மற்றும் வாழும் சூழல் என முறையான வாழ்வியல் முறைகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகளால் அதிகபட்சமாக 100 ஆண்டுகள் வரையும் வாழ முடியும் என்ற நிலை தற்போது உள்ளது. முந்தைய காலங்களில் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறை உள்ளிட்ட காரணங்களால் 100 வயதைத் தாண்டியும் சிலர் வாழந்துள்ளனர்.

மனிதனின் ஆயுளை அதிகரிக்க உதவும் காரணிகள்

தற்போது வளர்ந்து வரும் மருத்துவத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியானது மனிதனை நோய்களிலிருந்து பாதுகாத்து ஆயுளை அதிகரிக்க உதவுகிறது. கல்வி, வேலை, பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், குடிநீர், சத்தான உணவு வகைகள், உடல் நலம், மன நலம் போன்ற பல்வேறு காரணிகள் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மனிதன் நீண்ட ஆயுளுடன் வாழ பின்பற்ற வேண்டிய பல்வேறு பழக்கங்களில் சிலவற்றை நாம் இங்கு காண்போம்.

சுறுசுறுப்பாக இருங்கள்

தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலுக்கு வலிமையை கொடுக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

பலன்: உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். எலும்புகள் வலுவாகும். உடலுக்கு அதிக ஆற்றல் கிடைக்கும்.

நேர்மறை மனப்பான்மையுடன் இருங்கள்

நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனை கொண்டிருங்கள்.

பலன்: மன நலம் மேம்படும். மன அழுத்தம் குறையும்.

வலுவான உறவுகளை உருவாக்குங்கள்

உங்களின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நேர்மறை மனப்பான்மை கொண்டவர்களுடன் பழகுங்கள்.

பலன்: உணர்வு ரீதியான ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி நிலைக்கும்.

தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

நவீன தொழில் நுட்பங்களை கற்றுக்கொண்டு உங்கள் திறன்களை மெருகேற்றுங்கள்.

பலன்: மூளை செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்கள்

தியானம், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி அல்லது எழுதுதல், படித்தல் போன்ற பயிற்சிகளை செய்யுங்கள்.

பலன்: அமைதியான மனநிலை தக்கவைக்கப்படும். மனநலம் மேம்பாடு அடையும்.

ஊட்டச்சத்தான உணவு உண்ணுங்கள்

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய உணவை தேர்ந்தெடுங்கள்.

பலன்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சருமம் பொலிவறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com