

சுற்றுப்புற இரைச்சலை முற்றிலுமாகத் தவிர்க்கும் நுட்பம் கொண்டது. மறுசுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் இதன் மேல்பாகம் தயாரிக்கப் பட்டுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டது.
இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 6 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 14 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரத்தை சேமித்து வைக்க முடியும். கூகுள் அசிஸ்டென்ட், அமேசான் அலெக்ஸா உள்ளிட்ட குரல்வழி கட்டுப்பாடு மூலமும் இதை செயல்படுத்தலாம். இதன் விலை சுமார் ரூ.16,395.