சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்

சோனி நிறுவனம் எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.பி 13 என்ற பெயரிலான எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.
சோனி வயர்லெஸ் ஸ்பீக்கர்
Published on

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சோனி நிறுவனம் எஸ்.ஆர்.எஸ். எக்ஸ்.பி 13 என்ற பெயரிலான எளிதில் எடுத்துச் செல்லும் வகையிலான ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.3,990. இது 5 வாட் திறனை வெளிப்படுத்தும். தூசி மற்றும் நீர் புகா தன்மை கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் உள்ளீடாக மைக்ரோபோன் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி உள்ளதால் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 16 மணி நேரம் செயல்படும். பேட்டரியின் அளவைக் காட்டும் இன்டிகேட்டர் விளக்கு உள்ளது. இளஞ்சிவப்பு, நீலம், கருப்பு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் இது வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com