ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டெக்னோ நிறுவனம் புதிதாக ஸ்பார்க் கோ 2021 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பார்க் கோ 2021 ஸ்மார்ட்போன்
Published on

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் டெக்னோ நிறுவனம் புதிதாக ஸ்பார்க் கோ 2021 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.52 அங்குல முழு ஹெச்.டி. திரை கொண்ட இதில் மீடியாடெக் ஹீலியோ குவாட் கோர் பிராசஸர் உள்ளது. இது 2 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம், இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பின்புறம் விரல் ரேகை உணர் சென்சார் இடம் பெற்றிருக்கிறது.

நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.7,299.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com