தீபாவளி ஸ்பெஷல்: சுவையான வெள்ளை முறுக்கு செய்வது எப்படி..?

இந்த வாரம் சண்டே ஸ்பெஷல் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் தீபாவளி ஸ்பெஷலாக வெள்ளை முறுக்கு செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
தீபாவளி ஸ்பெஷல்: சுவையான வெள்ளை முறுக்கு செய்வது எப்படி..?
Published on: 

தேவையான பொருட்கள்:-

வெள்ளை உளுந்து - ½ கப்

பச்சரிசி மாவு - 2 கப்

உப்பு - தேவையான அளவு

சீரகம் - ½ டீஸ்பூன்

பெருங்காயப்பொடி - ¼ டீஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

கடலை எண்ணெய் - 1 லிட்டர்

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை :-

முதலில் உளுந்தம் பருப்பை ஒரு பாத்திரத்தில் தட்டி நன்கு கழுவிக் கொள்ளவும். அடுத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து கேஸ் அடுப்பை ஆன் செய்து, அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து உளுந்தை நன்றாக வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்து, உளுந்தை ஒரு மிக்சி ஜாரில் எடுத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெண்ணெய் பதத்திற்கு மையாக அரைத்துக்கொள்ளவும்.

அடுத்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துக்கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். மேலும், சீரகம், பெருங்காயப் பொடி, வேக வைத்த உளுந்தம் மாவு, வெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். உளுந்தம் மாவு ஈரமாக இருப்பதால் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்தாலே போதும். மாவு கையில் ஒட்டாத அளவுக்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து, கேஸ் அடுப்பில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைத்து, கடலை எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடாகியதும், முறுக்கு அச்சில் மாவை வைத்து வட்டமாக பிழிந்து, எண்ணெய்யில் ஒவ்வொன்றாக விடவும். முறுக்கை சுற்றிவரும் நுரை சற்று குறைந்ததும், அதை திருப்பிவிட்டு மற்றொரு புறமும் வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் முறுக்கை ஜல்லி கரண்டியால் எடுக்கவும். இப்படி, ஒவ்வொறு முறுக்காக போட்டு எடுக்கவும். சுவையான வெள்ளை முறுக்கு ரெடி.

X