

பாஸ்மதி அரிசி - ½ கப்
முட்டை - 6
கடலை எண்ணெய் - 1½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1 (பெரியது)
இஞ்சி-பூண்டு விழுது - ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகாய் பொடி - ½ டீஸ்பூன்
மல்லிப்பொடி - ½ டீஸ்பூன்
கரம் மசாலா - ½ டீஸ்பூன்
சீரகப்பொடி - ¼ டீஸ்பூன்
பெருஞ்சீரகப் பொடி - ¼ டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
மிளகுப்பொடி - ½ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:-
முதலில் பாஸ்மதி அரிசியை சாதமாக வடித்து ஆறவைத்துக்கொள்ளவும். சாதம் குழைந்துவிடக்கூடாது. அடுத்து, கியாஸ் அடுப்பை 'ஆன்' செய்து, வாய் அகன்ற பாத்திரம் ஒன்றை வைக்கவும். அதில், எண்ணெயை ஊற்றி சூடாகியதும், வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். வெங்காயம் சிவந்துவிடக்கூடாது. சிறிதளவு உப்பையும் சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் நன்கு வதங்கிய உடன், சிறிது கருவேப்பிலை, இஞ்சி-பூண்டு பேஸ்ட், வெட்டி வைத்த பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
அடுத்து, மிளகாய் பொடி, மல்லிப்பொடி, கரம் மசாலா, சீரகப்பொடி, பெருஞ்சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சேர்த்து கிளறிவிடவும். அடுப்பில் தீயை குறைத்து நன்கு வதக்கவும். வெட்டி வைத்த தக்காளியை சேர்த்து, நன்கு குலைந்து வரும் வரை வதக்கவும். தேவைக்கு ஏற்ப உப்பை சேர்த்துக்கொள்ளவும்.
மசாலா எல்லாம் நன்கு சேர்ந்து, தொக்கு பக்குவத்திற்கு வந்தவுடன், பாத்திரத்தில் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு, முட்டைகளை உடைத்து ஊற்றி, தனியாக வதக்கவும். திட்டு திட்டாக முட்டை வதங்கியவுடன், மசாலா தொக்குடன் சேர்த்து கிண்டிவிடவும்.
பின்னர், ஆறவைத்த சாதத்தை சேர்த்து கிளறவும். தொடர்ந்து, கொத்தமல்லி இலை மற்றும் மிளகுப்பொடியை சேர்த்து நன்கு கிளறிவிடவும். சுவையான முட்டை சாதம் ரெடி. இதற்கு சைடு டிஸ் எதுவும் தேவையில்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.