

திருமணமான நட்சத்திர ஜோடிகளில் சிலர் கூட, சில வருடங்களிலேயே தங்கள் உறவை முறித்துக்கொண்டு நிற்கும் அவலநிலையும் நடக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நட்சத்திர ஜோடிகளில் காதல் திருமணங்கள் ஒரு பக்கம் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது.
அந்த வகையில் இந்தப் பட்டியலின் அடுத்த கட்ட நகர்வில் இருக்கும் முக்கியமான நட்சத்திர ஜோடியாக ரன்பீர் கபூர்- அலியா பட் ஜோடி இருக்கிறது. ரன்பீர் கபூரைப் பொறுத்தவரை, ஒரு சில நடிகைகளுடன் காதல், கருத்துவேறுபாடு என்று மாறி மாறி வந்து, இப்போது அலியா பட்டை தேர்வு செய்திருக்கிறார்.
இவர்களின் சில வருடக் காதல், இப்போது அடுத்த கட்டமான கல்யாணத்திற்குள் நுழைய இருக்கிறது. இவர்கள் இருவருமே, சினிமா பின்னணி உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ரன்பீர் கபூர், பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ஆவார். அதே போல் பாலிவுட்டில் முன்னணி இயக்குனரான மகேஷ் பட்டின் மகள்தான் அலியா பட்.
இவர்கள் இருவரது திருமணமும், வருகிற டிசம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.