பங்குச்சந்தை துளிகள் : நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள்

கும்மின்ஸ் இந்தியா பங்குகளை வாங்கலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை துளிகள் : நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள்
Published on

* பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகளை விற்று விடலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.2,100-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 3.90 சதவீதம் உயர்ந்து ரூ.2,251.65-ஆக இருந்தது.

* ஜூபிலண்ட் புட் ஒர்க்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.580-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.1,490-ல் முடிவுற்றது. வியாழக்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 21 சதவீதம் உயர்வாகும்.

* கும்மின்ஸ் இந்தியா பங்குகளை வாங்கலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இதற்கான எதிர்கால இலக்கை ரூ.520-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.421-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.08 சதவீத ஏற்றமாகும்.

* எம்பசிஸ் நிறுவன பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என எம்கே குளோபல் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,060-ஆக நிர்ணயம் செய்து இருக் கிறது. மும்பை பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இந்தப் பங்கு விலை 6.17 சதவீதம் அதிகரித்து ரூ.703.80-ஆக இருந்தது.

* ஜஸ்ட் டயல் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.685-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கின் விலை 5.25 சதவீதம் முன்னேறி ரூ.332.95-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com