பங்குச்சந்தை துளிகள்: பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு

பாட்டா இந்தியா பங்கு பற்றிய மதிப்பீட்டை ஆனந்த் ரதி நிறுவனம் தொடங்கி இருக்கிறது.
பங்குச்சந்தை துளிகள்: பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு
Published on

* பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவன பங்கு பற்றிய மதிப்பீட்டை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,025-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.1,569.05-ல் முடிவுற்றது. கடந்த வியாழக் கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 1.90 சதவீத சரிவாகும்.

* வாடெக் வாபெக் பங்குகளை வாங்கலாம் என பிலிப்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.260-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை மாற்றம் இன்றி ரூ.217.20-ஆக இருந்தது.

* பாட்டா இந்தியா பங்கு பற்றிய மதிப்பீட்டை ஆனந்த் ரதி நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.2,180-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 2.44 சதவீதம் குறைந்து ரூ.1,759.45-ஆக இருந்தது.

* அரபிந்தோ பார்மா பங்குகளில் முதலீடு செய்யலாம் என சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் அந்தப் பங்கிற் கான எதிர்கால இலக்கை ரூ.900-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 15.96 சதவீதம் சரிவடைந்து ரூ.503.85-ல் முடிவுற்றது.

* லெமன்ட்ரீ ஹோட்டல்ஸ் பங்குகளை வாங்கலாம் என ஐ.டீ.பீ.ஐ. கேப்பிட்டல் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.83-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.63.20-ஆக இருந்தது. கடந்த வியாழக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.77 சதவீதம் உயர்வாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com