

* ஜே.கே. லட்சுமி சிமெண்ட் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.485-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.347.05-ல் முடிவுற்றது. கடந்த சனிக்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 2.16 சதவீத ஏற்றமாகும்.
* எஸ்.பீ.ஐ. லைப் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,145-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.912.70-ல் நிலைகொண்டது. சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 2.09 சதவீத உயர்வாகும்.
* கிராம்ப்டன் கிரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என டோலாட் கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.300-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 3.54 சதவீதம் அதிகரித்து ரூ.289.55-ஆக இருந்தது.
* ராம்கோ சிமெண்ட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.805-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.792-ஆக இருந்தது. கடந்த சனிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.73 சதவீத ஏற்றமாகும்.
* இண்டிகோ நிறுவன பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என பிரபுதாஸ் லீலாதர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,547-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், திங்கள்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 2.63 சதவீதம் முன்னேறி ரூ.1,392.15-ல் முடிவுற்றது.