பங்குச்சந்தை துளிகள்: வல்லுனர்களின் மதிப்பீடு

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எலாரா கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை துளிகள்: வல்லுனர்களின் மதிப்பீடு
Published on

* இந்தியன் ஹோட்டல் கம்பெனி பங்குகளை வாங்கலாம் என ஐ.டீ.பீ.ஐ. கேப்பிட்டல் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.200-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 0.50 சதவீதம் அதிகரித்து ரூ.140.35-ஆக இருந்தது.

* தாபர் இந்தியா பங்குகளை வாங்கலாம் என எஸ்.பீ.ஐ. கேப் செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.525-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.500.75-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.13 சதவீத உயர்வாகும்.

* ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எலாரா கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.610-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.499.40-ல் முடிவுற்றது. செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 1.10 சதவீத சரிவாகும்.

* ஜி.எம்.ஆர். இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்கு பற்றிய மதிப்பீட்டை கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.30-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. நேற்று இந்நிறுவனப் பங்கு 4.50 சதவீதம் சரிவடைந்து ரூ.24.40-ஆக இருந்தது.

* ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் அந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,980-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 1.99 சதவீதம் சரிவடைந்து ரூ.2,141.15-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com