

* வாரோக் இன்ஜினீயரிங் நிறுவன பங்குகளை வாங்கலாம் என இன்வெஸ்டெக் நிறுவனம் கூறுகிறது. எனினும், இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.600-ல் இருந்து) ரூ.520-ஆக குறைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 0.33 சதவீதம் சரிவடைந்து ரூ.377-ஆக இருந்தது.
* இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்குகளை வாங்கலாம் என எம்கே நிறுவனம் தொடர்ந்து பரிந்துரை செய்கிறது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.315ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.197.60-ஆக இருந்தது. வியாழக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 3.42 சதவீத இறக்கமாகும்.
* ஆக்சிஸ் வங்கி பங்குகளில் முதலீடு செய்யலாம் என நோமுரா நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,050-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 5.29 சதவீதம் சரிவடைந்து ரூ.696.75-ல் முடிவுற்றது.
* சிப்லா நிறுவன பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.525-ல் இருந்து) ரூ.450-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.401.45-ல் முடிவுற்றது. வியாழக்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 4.75 சதவீத சரிவாகும்.
* பெடரல் வங்கி பங்குகளை வாங்கலாம் என இன்வெஸ்டெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.112-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு 3.26 சதவீதம் இறங்கி ரூ.86.15-ஆக இருந்தது.
நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.