

* ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எலாரா கேப்பிட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.610-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.504.95-ல் முடிவுற்றது. கடந்த திங்கள்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 0.36 சதவீத சரிவாகும்.
* அம்புஜா சிமெண்ட் பங்குகளை வாங்கலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.245-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 0.86 சதவீதம் அதிகரித்து ரூ.211.70-ஆக இருந்தது.
* திவிஸ் லேபரட்டரீஸ் பங்குகளை வாங்கலாம் என ஷேர்கான் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,430-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.2,118.30-ஆக இருந்தது. கடந்த திங்கள்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.96 சதவீதம் குறைவாகும்.
* ஆக்சிஸ் வங்கி பங்குகளில் முதலீடு செய்யலாம் என மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கூறி இருக்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.860-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. நேற்று இந்நிறுவனப் பங்கு 0.43 சதவீதம் உயர்ந்து ரூ.728.90-ஆக இருந்தது.
* ஐநாக்ஸ் லெய்ஷர் நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஷேர்கான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் அந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.575-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், செவ்வாய்க் கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 1.86 சதவீதம் சரிவடைந்து ரூ.485.20-ல் முடிவுற்றது.
நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.