ரெயில் பாதையில் கற்கள்... மெட்ரோ பாதையில் கான்கிரீட்.. பின்னணி என்ன?

உயர்மட்டப் பாலங்கள் வழியாக செல்லும் ரெயில்களுக்கும் இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மெட்ரோ
Published on: 

ரெயிலில் பயணம் செய்யும்போது தண்டவாளங்களை சுற்றிலும் சிறிய கற்கள் கொட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஆனால் மெட்ரோ ரயில் பாதைகளில் தண்டவாளங்கள் கற்கள் இல்லாமல் கான்கிரீட் தளத்தின் மீது அமைக்கப்பட்டிருக்கும்.

இதற்கு என்ன காரணம் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பல மெட்ரோ ரெயில் பாதைகளில் கற்கள் இல்லாத தண்டவாள அமைப்பு (பல்லாஸ்ட்லெஸ் டிராக்) பயன்படுத்தப்படுகிறது.

கான்கிரீட் தளங்கள்

இந்த அமைப்பில் தண்டவாளங்கள் நேரடியாகவோ அல்லது சிறப்பு பொருத்து அமைப்புகள் மூலமாகவோ கான்கிரீட் தளங்கள் அல்லது பிளிந்த் எனப் படும் கான்கிரீட் ஆதரவு கட்டமைப்புகளின் மீது பொருத்தப்படுகின்றன. குறிப்பாக, சுரங்கப்பாதைகளுக்குள் செல்லும் மெட்ரோ ரெயில்களுக்கும், உயர்மட்டப் பாலங்கள் வழியாக செல்லும் ரெயில்களுக்கும் இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இத்தகைய இடங் களில் கற்களை கொண்டு அமைக்கப்பட்ட தண்டவாளங்களை பராமரிப்பதற்கு சற்று கடினமாக இருக்கும். மேலும் கற்களை ஆய்வு செய்வதும், சுத்தம் செய்வதும், கற்களை மாற்றுவதும் சிரமமாக இருக்கும்.

கான்கிரீட் தளம் தண்டவாளங்களை சரியான இடத்தில் உறுதியாக வைத் திருக்க உதவிடும். இதனால் வழக்கமான கற்கள் கொண்ட தண்டவாள அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சில பராமரிப்பு பணிகளை குறைக்க முடியும். இருப்பினும், கான்கிரீட் தண்டவாளங்களுக்கும் அவ்வப்போது ஆய்வு மற்றும் பராமரிப்பு தேவைப்படும்.

மெட்ரோ ரெயில்களுக்கு கான்கிரீட் ஏன் ஏற்றது?

மெட்ரோ ரெயில்கள் பெரும்பாலும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகர்ப்புறங்களில் இயக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் சுரங்கப்பா தைகள் வழியாகவும், சாலைகளுக்கு மேலே அமைக்கப்பட்ட உயர்மட்டப் பாலங்கள் வழியாகவும் செல்கின்றன. இத்தகைய இடங்களில் கான்கிரீட் தண்டவாள அமைப்பு பல நன்மைகளை வழங்குகிறது. வழக்கமான தண் டவாளங்களில் கற்களை மீண்டும் சீரமைப்பது, அடர்த்தியாக பதிப்பது போன்ற பணிகள் தேவைப்படும்.

மெட்ரோ வழித்தடத்தில் தண்டவாளங் கள் பொறியியல் முறையில் வடிவமைக்கப்பட்ட கான்கிரீட் கட்டமைப்பில் பொருத்தப்படுவதால், அவை சரியான இடத்திலும், உயரத்திலும் நிலை யாக இருக்க உதவும். கான்கிரீட் தளத்தை சுரங்கப்பாதையின் தரையு டனோ, உயர்மட்ட பால கட்டமைப்புடனோ இணைத்து அமைக்க முடி யும். குறைந்த இடவசதியும் பராமரிப்புக்கான அணுகல் சிரமமும் உள்ள பகுதிகளில் இது பயனுள்ளதாக இருக்கும். அதிர்வுகளை தணிக்கும் சிறப்பு பொருட்கள் மற்றும் அமைப்புகளை பயன்படுத்துவதன் மூலம், ரெயில் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகளையும், சத்தத்தையும் ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

கற்கள் இல்லாத பகுதி

கற்கள் இல்லாத தண்டவாள அமைப்பு மெட்ரோ ரெயில்களுக்கு மட்டுமே உரியதல்ல. வழக்கமான ரெயில் வழித்தடங்களிலும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், சில மெட்ரோ பணிமனை பகுதிகளில் கற்கள் கொண்ட தண்டவாள அமைப்பும் பயன்படுத்தப்படுகிறது.

X