

இதில் 96 சதவீதம் மறு சுழற்சி அடிப்படையில் உருவாக்கப்பட்டது. 5 ஏ டைப் சி முதல் டைப் ஏ கேபிளாக இவை வந்துள்ளன.
இதில் சி ரக கேபிளும் வந்துள்ளன. மின்னணு சாதனங்களை இணைப்பதற்கு அதாவது சார்ஜர் மூலம் ஸ்மார்ட்போனை இணைக்கவும், லேப்டாப்பிலிருந்து ஸ்மார்ட்போனை இணைக்கவும் இத்தகைய கேபிள்கள் பெரிதும் உதவியாக இருக்கும். பேக்கேஜிங்கிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் விதமாக இவை பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன.
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் நிறுவனத்திற்கு உள்ள பொறுப்பை உணர்த்தும் வகையில் இது அமைந்து உள்ளது. மறு சுழற்சி பிளாஸ்டிக்கில் இவை தயாரிக்கப்பட்டாலும் தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளப் படவில்லை என இந்நிறுவனம் தெரி வித்து உள்ளது. கேபிள் விலை ரூ.649 மற்றும் ரூ.699 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.