

ரவை - 1 கப்
பைனாப்பிள் (அன்னாச்சிபழம்) - 100 கிராம்
சர்க்கரை - 1 கப்
நெய் - ½ கப்
கடலை எண்ணெய் - ½ கப்
சூடான வெந்நீர் - 2 கப்
முந்திரி - ஒரு கைப்பிடி
உலர் திராட்சை - ஒரு கைப்பிடி
குங்குமப்பூ - 1½ கிராம் (தேவைப்பட்டால்)
ஒரு கடாயில் கடலை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி சூடாக்கவும். நெய் உருகியதும், அந்தக் கலவையில் பாதியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் உள்ள மீதி நெய், கடலை எண்ணெய் கலவையில் முந்திரி பருப்பு, உலர் திராட்சை ஆகியவற்றை போட்டு பொன்நிறமாக வறுக்கவும். அதன்பிறகு, ரவையை சேர்க்கவும். 3, 4 நிமிடங்கள் மிதமான தீயில் கலந்துவிடவும். தேவைப்பட்டால், குங்குமப்பூவையும் சேர்க்கலாம்.
தொடர்ந்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டிவைத்த பைனாப்பிள், சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து கிளறி விடவும். சூடான வெந்நீரையும் சேர்த்து, மிதமான தீயில் நன்கு கிளறிவிடவும். ரவை கட்டி விழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதன்பிறகு, ஏற்கனவே தனியாக எடுத்துவைத்த கடலை எண்ணெய், நெய் கலவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பைனாப்பிள் கேசரி ரெடி.