சண்டே ஸ்பெஷல்: சுவையான, மணமான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு செய்வது எப்படி..?

இந்த வாரம் பேச்சுலர்ஸ் சமையல் டிப்ஸ் பகுதியில் சுவையான, மணமான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கப்போகிறோம்.
சண்டே ஸ்பெஷல்: சுவையான, மணமான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு செய்வது எப்படி..?
Published on

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் வத்தல் - ஒரு கைப்பிடி

மணத்தக்காளி வத்தல் - ஒரு கைப்பிடி

நல்லெண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்

சீரகம் - ½ ஸ்பூன்

வெந்தயம் - ¼ ஸ்பூன்

மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்

வத்தல் தூள் - 2 ஸ்பூன்

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

சீரகத் தூள் - ½ ஸ்பூன்

சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

மிளகு தூள் - ½ ஸ்பூன்

புளி - எலுமிச்சை பழ அளவு

காய்ந்த மிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 20

பெரிய வெங்காயம் - 1

பூண்டு பல் - 15

தக்காளி - 2

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் சுண்டைக்காய் வத்தல், மணத்தக்காளி வத்தலை எண்ணெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதில் 4-ல் ஒரு பங்கை பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.

தொடர்ந்து, சின்ன வெங்காயம், வெட்டி வைத்த பெரிய வெங்காயம், பூண்டு பல், கருவேப்பிலை ஆகியவற்றுடன் உப்பையும் சேர்த்து வதக்கவும். தக்காளியை மிக்சியில் அரைத்து ஊற்றவும்.

பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், வத்தல் பொடி, மல்லி தூள், சீரகத்தூள், சாம்பார் பொடி ஆகியவற்றை போட்டு, புளிக்கரைசலையும் வடிகட்டி ஊற்றவும். கல் உப்பை சிறிது சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து, முதலில் வறுத்து வைத்த சுண்டைக்காய், மணத்தக்காளி வத்தல்களை சேர்க்கவும். தொடர்ந்து, மிளகு பொடி சேர்க்கவும். மேலும், முதலில் திறித்துவைத்த சுண்டைக்காய், மணத்தக்காளி பொடியை சேர்க்கவும். நன்கு கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். சுவையான வத்தல் குழம்பு ரெடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com