

சாதம் - 2 கப் (உதிரியாக)
எலுமிச்சை - 2 (சிறியது)
கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்கடலை - ஒரு கைப்பிடி (வறுத்தது)
முந்திரி பருப்பு - 10
பச்சை மிளகாய் - 3
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
முதலில், கேஸ் அடுப்பை 'ஆன்' செய்து, அதில் வாய் அகன்ற ஒரு பாத்திரத்தை வைக்கவும். அதில், கடலை எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடாகியதும் கடுகு, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நிறம் மாறும்வரை வறுக்கவும்.
அடுத்து, வேர்க்கடலை, முந்திரி பருப்பை சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும். தொடர்ந்து, இரண்டாக கீரிவைத்த பச்சை மிளகாய், பிய்த்து வைத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அடுப்பில் தீயை குறைத்தே வைக்கவும். அடுத்து, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடியை சேர்த்து லேசாக கிளறிவிட்டு, அடுப்பை 'ஆப்' செய்துவிடவும்.
ஒரு நிமிடம் கழித்து, பிழிந்துவைத்த எலுமிச்சை சாற்றை விதைகள் நீக்கி சேர்க்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கலந்துவிடவும். அடுத்து வேகவைத்த சாதத்தை அந்த கலவையும் சேர்த்து கிளறவும். சாதம் குழைந்துவிடாமல் இருக்க வேண்டும். ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருந்தால்தான், லெமன் சாறு அடங்கிய கலவை சாதம் முழுவதும் பரவும். சுவையான லெமன் சாதம் ரெடி.