

ரவை - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - ½ கப்
கடலை எண்ணெய் - ¼ கப்
முட்டை - 1
வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - 1 டீஸ்பூன் (வாசனைக்காக)
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 2 சிட்டிகை
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10
உலர் திராட்சை - 10
வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ரவையை எடுத்துக்கொள்ளவும். ரவையை வறுக்கத் தேவையில்லை. அத்துடன் பால், சர்க்கரை, கடலை எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். முட்டையையும் உடைத்து ஊற்றவும்.
அடுத்து, வெனிலா எக்ஸ்ட்ராக்ட், பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். பஜ்ஜி மாவு பதத்தில் இருக்க வேண்டும். ரொம்ப கெட்டியாகவும் இருக்கக்கூடாது. ரொம்ப தண்ணீராகவும் இருக்கக்கூடாது. அடுத்த 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அடுத்து, 5 காலி கிண்ணங்களை எடுத்துக்கொள்ளவும். அதன் உட்புறப்பகுதியில் லேசாக எண்ணெய் தேய்த்து, ஊற வைத்த கலவையை நன்கு கலக்கி கிண்ணங்களில் ஒவ்வொன்றாக ஊற்றவும்.
அதன்பிறகு, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்டை ஆகியவற்றை மேலே தூவவும். அடுத்து இந்த கிண்ணங்களை 15 நிமிடங்கள் இட்லி சட்டியில் வைத்து அவிக்கவும். சுவையான ரவா கேக் ரெடி.