திருநங்கையாக 'சுஷ்மிதாசென்'

நடிகை சுஷ்மிதாசென் புதிய வெப் தொடர் ஒன்றில் திருநங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
திருநங்கையாக 'சுஷ்மிதாசென்'
Published on

1994-ம் ஆண்டு 'பிரபஞ்ச அழகி'யாக தேர்வு செய்யப்பட்டவர், சுஷ்மிதாசென். அதன் மூலமாக அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1996-ம் ஆண்டு 'டாஸ்டக்' என்ற படத்தின் மூலமாக அவர் சினிமாத் துறையில் அடியெடுத்து வைத்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாத் துறையில் இருக்கும் சுஷ்மிதாசென், 2015-ம் ஆண்டிற்குப் பிறகு படவாய்ப்புகள் குறைந்ததால், வெப் சீரிஸ் மீது கவனம் செலுத்தினார். 'ஆர்யா', 'ஆர்யா 2' ஆகிய இரண்டு வெப் சீரிஸ்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிய வெப் தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இதில் அவர் திருநங்கையாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 'டாலி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரை, ரவி ஜாதவ் இயக்குகிறார். பிரபல சமூக ஆர்வலரான ஸ்ரீகவுரி சாவந்த் என்ற திருநங்கையின் வாழ்க்கையின் தழுவலாக இந்த வெப் தொடர் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் நடிக்கும் சுஷ்மிதாசென், தோற்றமும் சமீபத்தில் வெளியானது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதுபற்றி ஸ்ரீ கவுரி சாவந்த் கூறுகையில், "சினிமாத் துறையில் திருநங்கைகளின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது என்பதே ஆச்சரியமான ஒன்றுதான். அதில் ஒரு முன்னணி நட்சத்திரம் நடிக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com