

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் பொது சுகாதார துறையில் கம்ப்யூட்டர் கம் வேக்சின் ஸ்டோர் கீப்பர் (30), குடும்ப நலத்துறையில் சுகாதார புள்ளியியல் நிபுணர் (161), உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் புள்ளியியல் உதவியாளர் (2) என மொத்தம் 193 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பொதுப்பிரிவினர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது உச்ச வரம்பு இல்லை. கம்ப்யூட்டர் கம் வேக்சின் ஸ்டோர் கீப்பர் பணிக்கு புள்ளியியல் சார்ந்த பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். சுகாதார புள்ளியியல் நிபுணர் பதவிக்கு புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் இவற்றுள் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். புள்ளியியல் உதவியாளர் பணிக்கு கணிதம் அல்லது புள்ளியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 19-11-2021. விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவான விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.