டாடா பஞ்ச், நெக்சான், ஹாரியர், சபாரி காஸிரங்கா எடிஷன்ஸ்

டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளில் அதன் எஸ்.யு.வி. பிரிவுக்கு அமோக வரவேற்பு உள்ளது. இதைக் கொண்டாடும் விதமாக பஞ்ச், நெக்ஸான், ஹாரியர் மற்றும் சபாரி மாடல்களில் காஸிரங்கா எடிஷனை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
டாடா பஞ்ச், நெக்சான், ஹாரியர், சபாரி காஸிரங்கா எடிஷன்ஸ்
Published on

இந்தியாவின் மிகவும் பிரபலமான தேசிய வனவிலங்கு சரணாலயமான காஸிரங்காவின் பெருமையை உணர்த்தும் விதமாக காஸிரங்கா எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பஞ்ச் காஸிரங்கா எடிஷனை ஐ.பி.எல். போட்டியின்போது ஏலத்தில் விடப் போவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இதில் கிடைக்கும் தொகை வனச்சரக மேம்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

காஸிரங்கா மாடல் கார்கள் வித்தியாசமான பீஜ் நிறம் மற்றும் மேற்கூரை இரட்டை வண்ணத்திலும் இருக்கும். உள்புறத்திலும் சாதாரண மண் தரை போன்ற தோற்றத்திலான உயர் ரக தோலினால் ஆன இருக்கைகள், காட்டு மரங்களின் தோற்றத்திலான டேஷ் போர்டு உள்ளிட்டவை இதன் சிறம்பம்சமாகும்.

இரண்டாவது வரிசை தலைப்பகுதியில் இரண்டு காண்டா மிருகம் ஒன்றை ஒன்று பார்ப்பதைப்போன்ற டிசைன் இடம்பெற்றிருக்கும். முன்புறத்தில் காண்டாமிருகத்தின் படம் சாட்டின் துணியால் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com