

இதில் 6 வேரியன்ட்கள் (எக்ஸ்.இ., எக்ஸ்.எம்., எக்ஸ்.டி., எக்ஸ்டி.பிளஸ், எக்ஸ்.இஸட்., எக்ஸ்.இஸட்.பிளஸ்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். உயரமான பானட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.
இது 2 லிட்டர், 4 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 168 ஹெச்.பி. மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி உள்ளது. இந்த மாடலுக்கு சந்தையில் போட்டியாக எம்.ஜி. ஹெக்டார் பிளஸ் மட்டுமே உள்ளது.