டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்

டெக்னோ நிறுவனம் போவா 3 என்ற பெயரிலான குறைந்த விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
டெக்னோ போவா 3 ஸ்மார்ட்போன்
Published on

6.9 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.11,499. இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி 88 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. ரேம் மற்றும் கூடுதலாக 5 ஜி.பி. வர்ச்சுவல் ரேம் கொண்டது. இதன் பின்புறம் 50 மெகாபிக்ஸெல் கேமரா எல்.இ.டி. பிளாஷ் வசதியுடன் வந்துள்ளது. சில்வர், நீலம், கருப்பு நிறங்களில் கிடைக்கும்.

இதன் திரையில் அழைப்பு, சார்ஜிங், வீடியோ கேம் குறித்த அறிவுறுத்தல் கள் எல்.இ.டி. விளக்கொளியில் மின்னும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 7 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 25 வாட் சார்ஜிங் வசதி கொண்டதாக வந்துள்ளது.

4 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகம், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவக வசதி கொண்ட மாடல்கள் இரண்டு சிம் போடும் விதமாக வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்டது. முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.12,999.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com