ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன்

டெக்னோ நிறுவனம் ஸ்பார்க் கோ 2023 என்ற பெயரில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பார்க் கோ 2023 ஸ்மார்ட்போன்
Published on

இதன் விலை சுமார் ரூ.6,999. இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் 2 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும், பின்புறம் விரல் ரேகை உணர் சென்சாரும், 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com