கண்ணை கட்டிக்கொண்டே சாதித்த சிறுவன்

சார்ஜா முவைலாவில் மனைவி பூஜா மற்றும் இரண்டு மகன்களுடன் குடும்பத்துடன் வசித்து வருபவர் பிரகாஷ். தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ், மராட்டியத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு, இப்போது சார்ஜாவில் வசித்து வருகிறார்.
கண்ணை கட்டிக்கொண்டே சாதித்த சிறுவன்
Published on

பிரகாஷின் மூத்த மகன் வர்னித் (7), சென்னையில் பிறந்த அந்த சிறுவன் இப்போது துபாயில் உள்ள தனியார் சர்வதேச பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனுக்கு தன்வித் என்ற தம்பி உள்ளான்.

பொதுவாக சிறுகுழந்தைகள் கார்ட்டூன் சேனல்களிலும், செல்போனிலும் நேரத்தை கழிப்பவர்களாக இருக்கின்றனர். ஆனால் வர்னித் சற்று வித்தியாசமாக டிரம்ஸ் வாசிப்பதில் ஆர்வம் காட்டினான். அதில் இப்போது சாதனையும் புரிந்துள்ளான்.

அப்படி என்ன சாதனை செய்து விட்டான்? என்ற கேள்விக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட சாதனைகள் நமக்கு விளக்கம் அளிக்கின்றன. இதுவரை இந்த சாதனை புத்தகங்களில் கண்ணைக்கட்டிக்கொண்டு நீண்ட நேரம் டிரம்ஸ் வாசிக்கும் பிரிவில் 20 வயதுடையவர்களே சாதனை நிகழ்த்தி இருக்கின்றனர். அந்த சாதனைகளை முறியடித்து சிறு வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றிருக்கிறான், இந்த சாதனை சிறுவன்.

கண்ணைக்கட்டிக்கொண்டு தொடர்ந்து 10 நிமிடம் 27 வினாடிகள் சிறிதும் தப்பி விடாமல் அனாசயமாக கால்களாலும் சேர்ந்து இசைக்க கூடிய புட் டிரம்சை வாசித்து இந்த சாதனையை செய்துள்ளான். இதற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகங்களில் இந்த சிறுவன் இடம்பிடித்துள்ளான். குறிப்பாக ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வர்னித்துக்கு அளித்துள்ளது.

இசை மட்டுமல்லாமல் கணிதத்தில் மூன்று இலக்க எண்களில் கூட்டல், கழித்தல், இரண்டு இலக்க எண்களில் பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் 4 நிமிடங்களில் 31 கணக்குகளுக்கு விடை அளித்தும் அசத்தியிருக்கிறான். இதுவும் தனி சாதனையாக பதிவாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com