மனச்சோர்வை போக்கும் சத்து

உடல் இயக்க செயல்பாட்டுக்கு ஊட்டச்சத்துக்களின் பங்களிப்பு அவசியமானது. அதனால் சாப்பிடும் உணவில் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் கலந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மனச்சோர்வை போக்கும் சத்து
Published on

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் வைட்டமின் பி12 முதன்மையானது. அது குறித்து பார்ப்போம்.

ரத்த சிவப்பு அணுக்களின் உருவாக்கத்தில் வைட்டமின் பி 12-க்கும் பங்கு இருக்கிறது. ஒருவருடைய உடலில் வைட்டமின் பி12 குறைந்தால் அவரது சிவப்பணுக்களின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாவதோடு ரத்த சோகை நோயும் உண்டாகும்.

கண் நோய்களை தடுப்பதற்கு வைட்டமின் பி12 உதவுவதை பல்வேறு ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி 12 உதவுகிறது. எலும்புகளை பலவீனப்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு நேராமல் தடுக்கவும் இந்த சத்து அவசியம்.

சருமம், கூந்தல், நகங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளித்து அவற்றை பராமரிக்கவும் இந்த சத்து தேவை. மூளையின் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி12 நல்லது. நியூரான்களின் இழப்பை தடுப்பதோடு முதுமையை தாமதப்படுத்தவும் இந்த சத்து வழிவகை செய்கிறது.

மனச்சோர்வை போக்கி மன நலனை பேணவும் உதவும்.

வைட்டமின் பி 12 குறைபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. மூச்சு விடுவதற்கு சிரமப்படுதல், சருமம் வெளிர்தல், மங்கலான பார்வை, எப்போதும் சோர்வாக காட்சியளித்தல், மன அழுத்தம் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். குறைந்த கொழுப்பு சத்துள்ள பால், தயிர், பாலாடைக்கட்டி, மீன் வகைகள் போன்றவற்றில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com