நகைக்கடைகளில் தொடரும் இளஞ்சிவப்பு தாள் பழக்கம்: என்ன காரணம்?

தங்க நகைகளை இளஞ்சிவப்புத்தாளில் வைக்கும்போது அவற்றின் அழகு மேலும் மெருகேறி கூடுதல் பொலிவுடன் தெரிவதாக கருதப்படுகிறது.
தங்க நகை
Published on: 

தங்கம் பலருக்கும் வெறும் ஆபரணம் மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான பொருளாகவும் இருக்கிறது. நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்கும்போது இளஞ்சிவப்புத்தாளில் சுற்றிக்கொடுப்பதை கவனித்திருக்கிறீர்களா? இதற்கு பின்னால் சில சுவாரசியமான காரணங்கள் உள்ளன.

தங்கத்தின் அழகை அதிகரிக்கும் நிறம்

மஞ்சள் நிறத்தில் மின்னும் தங்க நகைகளை இளஞ்சிவப்புத்தாளில் வைக்கும்போது அவற்றின் அழகு மேலும் மெருகேறி கூடுதல் பொலிவுடன் தெரிவதாக கருதப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நகையை பார்க்கும்போது மகிழ்ச்சியான உணர்வு ஏற்படலாம்.

பாரம்பரியமாக தொடரும் பழக்கம்

பல ஆண்டுகளாக நகைக்கடைகளில் இளஞ்சிவப்பு அல்லது வெளிர் சிவப்புத்தாள்களைப் பயன்படுத்தி வருகின்றனர். காலப்போக்கில் இந்த பழக்கம் பாரம்பரியமாக மாறிவிட்டது என்ற கருத்தும் நிலவுகிறது.

நகைகளை தாளில் சுற்றிக்கொடுப்பது தூசி படிவதையும், எடுத்து செல்லும்போது ஏற்படும் சிறிய உராய்வுகளையும் குறைக்க உதவும். ஆனால் எல்லா இளஞ்சிவப்புத்தாள்களும் நகைகளை மங்காமல் பாதுகாக்கும் தன்மை கொண்டவை அல்ல. தங்க நகைகளை இளஞ்சிவப்புத்தாளில் சுற்றி கொடுப்பதற்கு பின்னால் அழகியல், பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பழக்கம் போன்ற காரணங்களே உள்ளன. இதற்கென அறிவியல் காரணம் இருப்பதாக கண்டறியப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com