வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் உயர்ந்தது நிப்டி 482 புள்ளிகள் முன்னேற்றம்

வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது.
வாரத்தின் இறுதி வர்த்தக தினத்தில் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் உயர்ந்தது நிப்டி 482 புள்ளிகள் முன்னேற்றம்
Published on

மும்பை

வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 482 புள்ளிகள் முன்னேறியது.

பங்குகளில் முதலீடு

நான்கு தினங்கள் பங்கு வியாபாரம் தொடர் சரிவு கண்டிருந்த நிலையில் பல்வேறு நிறுவனப் பங்குகளின் விலை கணிசமாக குறைந்து இருந்தது. அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி பலரும் பங்குகளை அதிக அளவில் முதலீடு செய்தனர். மேலும், இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகத்தின் இடையே 6 காசுகள் உயர்ந்தது. உலக நிலவரங்களும் சாதகமாக இருந்ததால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற்றன.

அந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் எரிசக்தி துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 9.96 சதவீதம் அதிகரித்தது. அடுத்து எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டு எண் 9.05 சதவீதம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 28 பங்குகளின் விலை உயர்ந்தது. 2 பங்குகளின் விலை சரிவடைந்தது.

இந்தப் பட்டியலில் ஓ.என். ஜி.சி., அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா ஸ்டீல், ஏஷியன் பெயிண்ட், ஐ.டி.சி., எச்.டீ.எப்.சி., நெஸ்லே இந்தியா உள்ளிட்ட 28 பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே சமயம் எச்.டீ.எப்.சி. வங்கி, இண்டஸ் இந்த் வங்கி ஆகிய 2 வங்கி பங்குகளின் விலை மட்டும் குறைந்தது.

சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 1,627.73 புள்ளிகள் அதிகரித்து 29,915.96 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 30,418.20 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 27,932.67 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,448 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,007 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 150 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.3,242 கோடியாக குறைந்தது. கடந்த வியாழக்கிழமை அன்று அது ரூ.3,384 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தை

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 482 புள்ளிகள் உயர்ந்து 8,745.45 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 8,883 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 8,178.20 புள்ளிகளுக்கும் சென்றது.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com