பங்குச்சந்தை துளிகள் : தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்

இன்போ எட்ஜ் இந்தியா நிறுவன பங்குகளை விற்றுவிடலாம் என பேங்க் ஆப் பரோடா கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தை துளிகள் : தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்
Published on

* எஸ்.பீ.ஐ. கார்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என மேக்கொயர் நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,025-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 7 சதவீதம் உயர்ந்து ரூ.731.05-ஆக இருந்தது.

* நாட்கோ பார்மா பங்குகளை விற்றுவிடலாம் என ஜியோஜித் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.534-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.548.95-ல் முடிவுற்றது. கடந்த திங்கள்கிழமை இறுதி நிலவரத் தைக் காட்டிலும் இது 2.24 சதவீத சரிவாகும்.

* இன்போ எட்ஜ் இந்தியா நிறுவன பங்குகளை விற்றுவிடலாம் என பேங்க் ஆப் பரோடா கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இதற்கான எதிர்கால இலக்கை ரூ.2,080-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.2080-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 4.91 சதவீத இறக்கமாகும்.

* ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (ஜி.ஐ.சி. ரீ) பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.டீ. எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.270-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை பங்குச்சந்தையில் செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இந்தப் பங்கு விலை 1.63 சதவீதம் சரிவடைந்து ரூ.129.80-ஆக இருந்தது.

* யெஸ் வங்கி பங்குகளில் முதலீட்டை குறைத்துக் கொள்ளலாம் என மேக்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.28.80-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்தப் பங்கின் விலை 58 சதவீதம் அதிகரித்து ரூ.58.65-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com