பங்குச்சந்தை துளிகள்

* ஜூபிலன்ட் லைப் சயின்சஸ் நிறுவனப் பங்கு பற்றிய மதிப்பீட்டை ஐ.டீ.பீ.ஐ. கேப்பிட்டல் நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.620-ஆக நிர்ணயித்து இருக்கிறது.
பங்குச்சந்தை துளிகள்
Published on

மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.469.75-ல் நிலைகொண்டது. முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 2.38 சதவீதம் குறைவாகும்.

* கோல் இந்தியா நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என கோட்டக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.290-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.257.35-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.15 சதவீத சரிவாகும்.

* ஐசிஐசிஐ வங்கிப் பங்குகளை வாங்கலாம் என மேக்கொயர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.465-ல் இருந்து) ரூ.525-ஆக உயர்த்தி இருக்கிறது. மும்பை சந்தையில் புதன்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.419.90-ல் நிலைபெற்றது. செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.54 சதவீதம் குறைவாகும்.

* பாரத் போர்ஜ் நிறுவனப் பங்குகளை விற்று விடலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.420-ல் இருந்து) ரூ.390-ஆக குறைத்துள்ளது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.434.70-ல் நிலைபெற்றது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 1.06 சதவீத சரிவாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com