பங்குச்சந்தை துளிகள் - பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு

டாட்டா பவர் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என ஜெபரீஸ் நிறுவனம் கூறி உள்ளது.
பங்குச்சந்தை துளிகள் - பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு
Published on

* பார்தி இன்ப்ராடெல் நிறுவன பங்குகளை விற்று விடலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் தொடர்ந்து கூறுகிறது. மேலும், இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.230-ல் இருந்து) ரூ.200-ஆக குறைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், வியாழக்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை 2.13 சதவீதம் அதிகரித்து ரூ.223.40-ஆக இருந்தது.

* டாட்டா பவர் பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என ஜெபரீஸ் நிறுவனம் கூறி உள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.90-ல் இருந்து) ரூ.55-ஆக குறைத்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.49.35-ஆக இருந்தது. கடந்த புதன்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.10 சதவீத உயர்வாகும்.

* ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,980-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், வியாழக்கிழமை வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 1.40 சதவீதம் சரிவடைந்து ரூ.2,111.20-ல் முடிவுற்றது.

* ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகளை விற்று விடலாம் என சிட்டி குரூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.350-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.491.40-ல் முடிவுற்றது. புதன்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 1.60 சதவீத சரிவாகும்.

* நெஸ்லே இந்தியா நிறுவன பங்குகளை வாங்கவும் வேண்டாம், விற்கவும் வேண்டாம் என மேக்கொயர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.15,640-ஆக நிர்ணயம் செய்து இருக்கிறது. வியாழக்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு 0.01 சதவீதம் அதிகரித்து ரூ.16,261.55-ஆக இருந்தது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com