பங்குச்சந்தை துளிகள்: நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள்

பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என டோலாட் கேப்பிட்டல் நிறுவனம் கூறி உள்ளது.
பங்குச்சந்தை துளிகள்: நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள்
Published on

* ன்டெக் ரியாலிட்டி நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறுகிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.489-ஆக நிர்ணயித்து இருக் கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.389.45-ல் முடிவுற்றது. கடந்த வார இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 0.88 சதவீத சரிவாகும்.

* பேஜ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என டோலாட் கேப்பிட்டல் நிறுவனம் கூறி உள்ளது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.25,052-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.22519.20-ல் நிலைகொண்டது. சென்ற வார இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 0.43 சதவீத உயர்வாகும்.

* கே.என்.ஆர். கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன பங்குகளை வாங்கலாம் என எஸ்.பீ.ஐ. கேப் செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.337-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 2.02 சதவீதம் அதிகரித்து ரூ.282.30-ஆக இருந்தது.

* கல்ப் ஆயில் லூப்ரிக்கன்ட்ஸ் நிறுவன பங்கு களில் முதலீடு செய்யலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.995-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.756.85-ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 2.90 சதவீத சரிவாகும்.

* பிநோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.641-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 3.11 சதவீதம் முன்னேறி ரூ.556.50-ல் முடிவுற்றது.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com