

* பார்தி இன்ப்ராடெல் நிறுவன பங்கு பற்றிய மதிப்பீட்டை ஜெபரீஸ் நிறுவனம் குறைத்துள்ளது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.180-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.246-ல் முடிவுற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தைக் காட்டிலும் இது 2.37 சதவீத ஏற்றமாகும்.
* ஜூபிலண்ட் புட் ஒர்க்ஸ் பங்குகளில் முதலீடு செய்யலாம் என எச்.எஸ்.பீ.சி. நிறுவனம் கூறி உள்ளது. மேலும், இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் (ரூ.1,700-ல் இருந்து) ரூ.2,060-ஆக உயர்த்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.1,942.15-ல் நிலைகொண்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்தை காட்டிலும் இது 0.51 சதவீத உயர்வாகும்.
* டெக் மகிந்திரா நிறுவன பங்குகளை வாங்கலாம் என ஐ.ஐ.எப்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.1,000-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.36 சதவீதம் அதிகரித்து ரூ.814.05-ஆக இருந்தது.
* இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என ஈடல்வைஸ் நிறுவனம் கூறி இருக்கிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.2,288-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.2,160.15-ஆக இருந்தது. முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.24 சதவீத ஏற்றமாகும்.
* டி.டி.கே. பிரெஸ்டீஜ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் பரிந்துரை செய்கிறது. எனினும், இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.8,165-ல் இருந்து) ரூ.7,200-ஆக குறைத்து இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 0.01 சதவீதம் முன்னேறி ரூ.5,887.40-ல் முடிவுற்றது.