பங்குச்சந்தை துளிகள்

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.
பங்குச்சந்தை துளிகள்
Published on

* பாலிகேப் இந்தியா நிறுவனப் பங்கு பற்றிய மதிப்பீட்டை ஈடல்வைஸ் நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.845-ஆக நிர்ணயித்து இருக்கிறது. மும்பை சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கு ரூ.718.05-ல் முடிவுற்றது. இது கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.95 சதவீதம் உயர்வாகும்.

* சன் பார்மா நிறுவனப் பங்குகளை வாங்கலாம் என சி.எல்.எஸ்.ஏ. நிறுவனம் தொடர்ந்து அறிவுறுத்துகிறது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.540-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகம் முடிந்தபோது இப்பங்கின் விலை ரூ.399.50-ல் நிலைகொண்டது. இது முந்தைய நாள் இறுதி நிலவரத்தை காட்டிலும் 0.73 சதவீதம் ஏற்றமாகும்.

* மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என ரிலையன்ஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம் கூறுகிறது. இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை இந்நிறுவனம் ரூ.650-ஆக நிர்ணயித்துள்ளது. மும்பை சந்தையில், நேற்று வர்த்தகம் முடிந்தபோது இந்தப் பங்கின் விலை ரூ.584.10-ஆக இருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது இது 0.09 சதவீத இறக்கமாகும்.

* பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கினை வாங்கலாம் என சிட்டி குரூப் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்நிறுவனம் இந்தப் பங்கிற்கான எதிர்கால இலக்கை (ரூ.475-ல் இருந்து) ரூ.550-ஆக உயர்த்தி இருக்கிறது. மும்பை சந்தையில், புதன்கிழமை அன்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை 4.43 சதவீதம் அதிகரித்து ரூ.511.95-ல் முடிவுற்றது.

* இண்டஸ் இந்த் வங்கி பங்குகளை வாங்கலாம் என எச்.டீ.எப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இப்பங்கிற்கான எதிர்கால இலக்கை ரூ.1,904-ஆக நிர்ணயித்து இருக்கிறது. நேற்று வர்த்தகத்தின் இறுதியில் இப்பங்கின் விலை ரூ.1,273.65-ல் நிலைகொண்டது. இது முந்தைய நாள் இறுதி நிலவரத்தைக் காட்டிலும் 0.13 சதவீத ஏற்றமாகும்.

நிறுவனப் பங்குகள் பற்றிய பரிந்துரைகள் பங்குச்சந்தை வல்லுனர்களின் மதிப்பீடு அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. எனவே, பங்குகளில் முதலீடு செய்வோர் அந்த நேரத்தில் சந்தை நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆராய்ந்து தமது சொந்த முடிவுகளின் பேரில் அல்லது தமது முதலீட்டு ஆலோசகரின் அறிவுரையின்படி செயல்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com