

சாதாரண மஞ்சளில் 3 முதல் 5 சதவீதம் குர்குமின் நிரம்பியிருக்கும். ஆனால் மேகாலயாவின் ஜெயந்தியா மலைகளில் வளர்க்கப்படும் லக்கடாங் மஞ்சள் அதிக குர்குமின் உள்ளடக்கம் கொண்டதாக அறியப்படுகிறது.
அதில் 12 சதவீதம் குர்குமின் நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் இது உலகின் மிகச்சிறந்த மஞ்சள் வகைகளில் ஒன்றாக பிரபலமடைந்து வருகிறது. ஜெயந்தியா மலையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமத்தில் இந்த வகை மஞ்சள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது மற்ற மஞ்சள் வகைகளை விட அதிக சுவையும், பிரகாசமான நிறமும் கொண்டது. அதனால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.
டிரினிட்டி சாஜூ என்ற பெண் இந்த மஞ்சள் சாகுபடியை பிரபலப்படுத்தினார். அவரை பின்பற்றி ஏராளமான விவசாயிகள் லக்கடாங் மஞ்சளை சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த மஞ்சள் சாகுபடிக்காக 2020-ம் ஆண்டு டிரினிட்டி சாஜூ பத்மஸ்ரீ விருது பெற்றார்.