திருக்குறள் சிறப்புகள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..
திருக்குறள் சிறப்புகள்
Published on

* திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம்.

* தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை.

* திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42 ஆயிரத்து 194.

* அனிச்சம், குவளை ஆகிய இரண்டு மலர்கள் மட்டும்தான், திருக்குறளில் இடம் பிடித்துள்ளன.

* திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம், நெருஞ்சிப் பழம்.

* தமிழ் உயிர்எழுத்துக்களில் ஒன்றான ஔ மட்டும், திருக்குறளில் இடம்பெறவில்லை.

* திருக்குறள் நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள், பனை மற்றும் மூங்கில்.

* திருக்குறளில், 9 என்ற எண் இடம்பெற வில்லை. அதே சமயம் 7 என்ற எண், எட்டு குறள்களில் இடம்பெற்றுள்ளது.

* திருவள்ளுவர், திருக்குறளில் பாடியிருக்கும் ஒரே விதை குன்றின்மணி

* திருக்குறள் இதுவரை 80 மொழிகளில், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

* நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும், திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com