இரவு உணவில் இது தேவையில்லை

இரவு எட்டு மணிக்குள் சாப்பிடுபவர்களின் உடல் நலம் சீரான ஆரோக்கியத்திற்குள் இருப்பதாகவும், செரிமானமும் சீராக நடைபெறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இரவு உணவில் இது தேவையில்லை
Published on

ஆனால் நிறைய பேர் இரவு உணவை தாமதமாகத்தான் உட்கொள்கிறார்கள். நள்ளிரவில் எழுந்து பசியை போக்குபவர்களும் இருக்கிறார்கள். ஆரோக்கியமான உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும் சிலவகை உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.

மாமிசம்: இரவு நேரத்தில் மாமிச உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் மெதுவாகத்தான் நடைபெறும். உடலின் வளர்சிதை மாற்றத்தையும் குறைத்துவிடும். மேலும் உடல் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்தும். இரவில் தூங்குவதற்கும் சிரமப்பட நேரிடும். இரவில் இறைச்சி சாப்பிடுவர்கள் வழக் கத்தை விட குறட்டை சத்தத்தை அதிகமாக வெளிப்படுத்துவார்கள். அதனால் இரவில் இறைச்சி உணவுகளை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.

ஐஸ்கிரீம்: இரவு விருந்துக்கு செல்பவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்கிரீமை விரும்பி ருசிக்கும் வழக்கம் பரவலாக நடைமுறையில் இருக்கிறது. அதில் அதிக அளவு கொழுப்பும், சர்க்கரையும் கலந்திருக்கிறது. இவை இரவு நேரத்தில் உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. உடல் எடை அதிகரிப்புக்கு வித்திடும்.

பாஸ்தா: பசியுடன் இருக்கும் சமயத்தில் பாஸ்தா சாப்பிடலாம். அதில் இருக்கும் ஊட்டச்சத்துகள் உடலுக்கு நன்மை சேர்க்கும். ஆனால் இரவு நேரத்தில் பாஸ்தா சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவை அதிகப்படுத்திவிடும். அதனால் உடல் எடையும் அதிகரிக்கக்கூடும். உடலில் கார்போஹைட்ரேட் அளவை உயர்த்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

சாக்லேட்: இதில் இருக்கும் காபினும், ஊட்டச்சத்துக்களும் இதயத்திற்கு நலம் சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் இரவில் சாக்லேட் உட்கொள்வது பதற்றத்தை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துவிடும்.

மதுபானம்: இரவு நேரத்தில் மது அருந்துவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும் என்பது கட்டுக்கதை. உண்மை என்னவென்றால், மதுபானம் தூக்க முறையை முற்றிலுமாக மாற்றிவிடும். உடலில் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துவிடும். காலையில் புத்துணர்ச்சியுடன் எழ முடியாது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com