

மும்பை,
டைம் டிராவல் எனப்படும் காலத்தை கடந்து பயணிக்கும் முறையில் எதிர்காலத்திற்கு சென்றுவிட்டு திரும்பியுள்ளதாக கூறப்படும் ஒரு மனிதர், தான் எதிர்காலத்தில் கண்ட சம்பவங்களை தொகுத்து கூறியுள்ளார்.
இதை கேட்பதற்கு சற்று அதிர்ச்சியாகவும் நம்பமுடியாததாகவும் தான் இருக்கிறது. எப்படியிருந்தாலும் சரி, அந்த மனிதர் என்ன தான் கூறுகிறார் என்பதை காண்போம்.
அவருடைய கூற்றுப்படி, வருங்காலங்களில், வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் மூளும் என்று அவர் தெரிவித்தார். ஆனால் யார் அந்த போரை முதலில் தொடங்குவார்கள் என்ற தகவலை தெரிவிக்கவில்லை.
இந்த ஆண்டு நடைபெற உள்ள அதிர்ச்சிகர சம்பவங்களை அவர் அடுக்கடுக்காக தனது டிக்டாக் பதிவில் வெளியிட்டுள்ளார். இம்மாதம் 10ம் தேதி அவர் அந்த வீடியோவை பதிவிட்டு மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அதன்படி, மார்ச் மாதம் வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் மூளும் என்று கணித்துள்ளார். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடைபெறவில்லை.
ஏப்ரல் மாதம், கொரோனா வைரசின் புதிய வகை மாறுபாடான ஒமேகா என்ற வைரஸ் பூமியை தாக்கும் என்று கூறினார். அந்த கொடூர வைரஸ் கொரோனாவை விட 5 மடங்கு வீரியமானதாக இருக்கும் என்றார்.
மே மாதம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கேலெட்-33 என்ற புது கிரகத்தை கண்டறியும்.அதில் உயிர்கள் வாழும் என்பதையும் கண்டறியும் என்று தெரிவித்தார்.
ஜூன் மாதம், ஜார்ஜியா மற்றும் தெற்கு கலிபோர்னியா இடையே சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கும். ஜூலை மாதத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ்-கலிபோர்னியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும். அதனால், கடலில் சுனாமி போன்ற பேரலைகள் உருவாகலாம்.
செப்டம்பரில், சீன கடற்கரையில் 4 வெஸ்டா என்ற விண்கல் விழும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்ததையடுத்து, படைகளை திரட்ட தயாராக இருக்குமாறு ராணுவ அதிகாரிகளிடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் கூறியுள்ளார் என்ற செய்தி வெளியானது.
இவற்றையெல்லாம் வைத்து அவர் தனது சொந்த கணிப்பில், எதிர்காலத்தில் இவ்வாறு நிகழும் என்று தெரிவித்தாரா அல்லது பொய்யாக கட்டுக்கதை கூறினாரா என்பதற்கு காலம் தான் பதில் அளிக்கும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.