மக்களை கவரும் ‘டயர்’ அலங்காரம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் செடிகளை வளர்த்து தான் வேலைபார்க்கும் அலுவலகம் மற்றும் வீட்டின் சுற்றுப்புற பகுதிகளை அழகால் ஜொலிக்க வைக்கிறார், பபான் மொஹந்தா.
டயர்களில் செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும் காட்சி; பாட்டில் அலங்கார செடிகளுடன் மொஹந்தா..
டயர்களில் செடிகள் வளர்க்கப்பட்டிருக்கும் காட்சி; பாட்டில் அலங்கார செடிகளுடன் மொஹந்தா..
Published on

37 வயதாகும் இவர் மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள மிட்னாபோரே பகுதியை சேர்ந்தவர். அங்குள்ள வனசரகத்தில் அதிகாரியாக பணிபுரிகிறார்.

இவர் பணிபுரியும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் அதன் முகப்பு பகுதியை பார்த்து வியப்படைகிறார்கள். அந்த அளவுக்கு பலவிதமான பூஞ்செடிகள் ஆங்காங்கே நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டு அழகால் கவர்கின்றன. அவற்றுக்கு இடையே பிளாஸ்டிக் பாட்டில்களில் பூஞ்செடிகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. அவை பிளாஸ்டிக் பாட்டில்கள்தானா? என்று சந்தேகிக்கும் வகையில் பாட்டில்களையும் வித்தியாசமாக வடிவமைத்திருக்கிறார். பாட்டில்களில் பூஞ்செடிகள் பூத்து குலுங்குகின்றன.

மொஹந்தா செடிகள் வளர்ப்பதற்காக அனைத்து வகையான பிளாஸ்டிக் பாட்டில் களையும் சேகரித்து இருக்கிறார். அதற்கு நண்பர்களும், உறவினர்களும் உதவி இருக்கிறார்கள்.

என்னிடம் 1500-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் இருக்கின்றன. அவை செடி களாகவும், பிற அலங்கார பொருட்களாகவும் காட்சி அளிக்கின்றன. என்னுடைய செயல்பாடுகளை பார்த்து நிறைய பேர் பிளாஸ்டிக் பாட்டில்களை என்னிடம் கொண்டு வந்து கொடுத்து அவற்றையும் பயன்படுத்துமாறு கூறுகிறார்கள். அவர்கள் காட்டும் ஆர்வம் சுற்றுப்புற பகுதியில் உள்ள பள்ளிகளிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தூண்டியது என்கிறார்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் இப்படியெல்லாம் செடிகள் வளர்க்க முடியுமா? என்று ஆச்சரியப்படும் வகையில் மொஹந்தாவின் செயல்பாடு அமைந்திருக்கிறது. கோபுர வடிவில் மரக்கட்டைகளை அடுக்கி அவைகளை சுற்றி பிளாஸ்டிக் பாட்டில்களை தொங்கவிட்டும் அழகுபடுத்துகிறார். பாட்டில்களை போல கார், லாரிகளின் டயர்களை வெட்டி தொங்கவிட்டும் அதில் செடிகளை வளர்க்கிறார். அவற்றில் விதவிதமான நிறங்களில் வர்ணம் தீட்டியும் அழகுபடுத்தி கவனம் ஈர்க்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com