

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த இவருக்கு 42 வயதாகிறது. தரிசு நிலத்தை வெறுமனே விளை நிலமாக மட்டும் மாற்றாமல் இயற்கை விவசாயத்தை கற்றுக்கொடுக்கும் களமாகவும் மாற்றி இருக்கிறார். யோகா, ஓவியம் வரைதல், காகித தயாரிப்பு போன்ற கலைகளை பயிற்றுவிக்கும் இடமாகவும் உருமாற்றி இருக்கிறார். இந்த கலைநயமிக்க கிராமம் மும்பையில் இருந்து 63 கி.மீ தொலைவில் கர்ஜத் என்ற இடத்தில் அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
இங்கு வந்து பலரும் விடுமுறையை மன மகிழ்ச்சி யுடன் கழிப்பதோடு இயற்கை விவசாயத்தையும், கைவினை கலைகளையும் கற்றுக்கொண்டு செல் கிறார்கள்.
இந்த சுற்றுலாத்தலம் மூலம் 20 பேருக்கு வேலைவாய்ப்பையும் அளித்துள்ளார் கங்கா. தன் தாயார் கொடுத்த 7 ஏக்கர் நிலத்தை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுற்றுலா கிராமமாக மாற்றி இருக்கிறார். அதற்கான காரணத்தை கங்கா விவரிக்கிறார்.
2016-ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த தரிசு நிலத்தை சுற்றி குப்பையாக கிடந்தது. அதனால் இந்த இடத்தில் எதையும் செய்வது சாத்தியமில்லாததாக இருந்தது. எவ்வித பராமரிப்புமின்றி நிலம் வீணாக கிடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனை ஏதாவ தொரு வகையில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டேன். முதலில் குப்பைகளை அகற்றிவிட்டு பழ மரக்கன்றுகளை நட்டோம். அடுத்து இயற்கை விவ சாயத்தை தொடங்கினோம்.
இன்றைக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. பல வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இயற்கை முறையில் காய்கறிகள், பழங்கள், மூலிகைகள் உள்பட பல்வேறு வகையான தானியங்களை பயிரிடுகிறோம். இங்கு வரும் விருந்தினர்களுக்கு இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை கொண்டு தயாரான உணவு களையே பரிமாறுகிறோம்.
காலநிலைக்கு ஏற்றவாறு இந்த சுற்றுச்சூழல் கிராமத்தை உரு வாக்கியுள்ளோம். அதனால் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரியான பருவநிலையே நிலவுவதுபோல் தோன்றும். பாரம்பரிய முறை யிலேயே கட்டுமானங்களையும் உருவாக்கியுள்ளோம்.
செங்கல், சுண்ணாம்பு மற்றும் மண் கலந்த கலவையால் அறையின் சுவர்களை கட்டமைத்திருக்கிறோம். இந்த சுவர்கள் வளைந் திருக்கும். எனினும் வலுவானவை. குறைந்தபட்ச கார்பன் வெளியேற்றத்தை பராமரிக்க சிறப்புக்கவனம் செலுத்தி வருகிறோம்.
ஜன்னல் மற்றும் கதவுகள் வீணாக கிடந்த மரங் களைப் பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. தியான அறை, சமையலறை மற்றும் சமுதாயக் கூடம் ஆகியவை மரத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து மூலப்பொருட் களையும் எளிதாக மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
70 சதவீத தண்ணீரை மீண்டும் பயன்படுத்து கிறோம். அப்படி மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் விவசாயம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக பயன் படுத்தப்படுகிறது. இதனால் நிறைய தண்ணீரை மிச்சப்படுத்த முடிகிறது.
இப்பகுதி வனமாக விரிவாக்கம் செய்யப்பட்டால், இங்குள்ள கட்டுமானங்களை எதிர்காலத்தில் எளிதாக அகற்றிவிடலாம். அதற்கேற்ப கான்கிரீட்டோ, சிமெண்டோ பயன்படுத்தவில்லை.
சுற்றுலாப் பயணிகள் தவிர புகைப்படக்கலைஞர்கள், படத்தயாரிப்பாளர்கள், ஓவியர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் என பலதரப்பினரும் பார்வையிட்டு செல்கிறார்கள். இங்கு இயற்கை விவசாயம், ஓவியம், யோகா போன்றவற்றையும் கற்றுக்கொடுக்கிறோம் என்கிறார்.