வளிமண்டலத்தில் நச்சுக்காற்று

உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது. ஓரிடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மனிதன் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலோ உயிர் வாழ்வது சாத்தியமில்லை.
வளிமண்டலத்தில் நச்சுக்காற்று
Published on

ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் வைத்திருக்கிறோம் என்றால், அதிலுள்ள தண்ணீரை எவ்வளவு வெளியேற்றுகிறோமோ அவ்வளவு காற்று அந்த இடத்தை ஆக்கிரமித்து கொள்கிறது. அந்த காற்று உள்ளே சென்று அழுத்துவதால்தான், உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே வருகிறது.

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் காற்றை சுவாசித்தே வாழ்கின்றன. உயிரினங்கள் ஆக்சிஜனை சுவாசித்து, கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடுகின்றன. நேர்மாறாக, தாவரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்திக் கொள்கின்றன, பதிலாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இந்த வேதிவினை தொடர்ந்து நடைபெறவில்லை என்றாலோ, இதன் சமநிலை குலைந்தாலோ உலகம் உயிர்ப்புடன் இருப்பது சாத்தியமில்லை. மனிதர்கள் உயிர்வாழ உணவு, தண்ணீர் போன்றவை தேவைதான். என்றாலும், இவை அனைத்தும் இருந்து ஓரிடத்தில் ஆக்சிஜன் இல்லையென்றால், மனிதன் வாழ முடியாது. உடல் இயங்குவதற்கான சக்தியை உருவாக்குவதில் ஆக்சிஜன் பெரும் பங்காற்றுகிறது. ஓரிடத்தில் ஆக்சிஜன் குறைவாக இருந்தாலோ, மனிதன் சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்பட்டாலோ உயிர் வாழ்வது சாத்தியமில்லை.

நமது நுரையீரல் நான்கு முதல் ஆறு லிட்டர் காற்றை சராசரியாக பிடித்து வைத்திருக்கக்கூடியது. அதில் ஒரு சிறு பகுதியைத்தான் நாம் சுவாசிக்க பயன்படுத்திக் கொள்கிறோம்.

நம்மில் பலரும் நம்புவது போல நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் பெருமளவு காடுகளில் இருந்து வருவதில்லை. கடல்களில் இருந்தே வருகின்றன. கடலில் உள்ள ஆல்கா எனப்படும் பாசிகள் வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனில் பெருமளவை உற்பத்தி செய்கின்றன. இந்த தாவரங்கள் சிறியதாக இருந்தாலும், பெருமளவில் இருப்பதால், ஆயிரக்கணக்கான கிலோ ஆக்சிஜனை உற்பத்தி செய்து வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.

காற்று நிரம்பிய வளிமண்டலம்தான் (ஓசோன் படலம்) சூரியனிலிருந்து வெளிப்பட்டு நமக்கு பாதக விளைவுகளை ஏற்படுத்தும் புறஊதா கதிர்களின் வீரியத்தைக் குறைப்பதுடன், சூரியனில் இருந்து வரும் கூடுதலான வெப்பத்தை மட்டுப்படுத்தவும் செய்கின்றன.

நமக்கு இவ்வளவு நன்மைகள் செய்யும் வளிமண்டலத்தின் இன்றைய நிலைமை சொல்லிக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. பெருநகரங்கள், கடுமையாக மாசுபட்ட பகுதிகளின் மேலே உள்ள வளிமண்டலப் பகுதியில் அடர்த்தியான நச்சுக்காற்று சூழ்ந்து இருப்பதாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவிக்கிறார்கள். விண்வெளியில் இருந்து பார்க்கும்போது காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வருவதை அவர்கள் இவ்வாறு சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com