இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப்பணி

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணியிடங்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிகளுக்கு 380 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப்பணி
Published on

இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஐ.ஓ.சி.எல். பைப்லைன் டிவிஷன்களில் பயிற்சிப் பணியிடங்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 17 மாநிலங்களில் 380 பணி யிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழகத்தில் 19 பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு 18 முதல் 24 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயர்கள் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கும், பட்டதாரிகள் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கும், 12 படித்தவர்கள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். நவம்பர் 22-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 8-ந்தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விரிவான விவரங்களை https://plis.indianoilpiplines.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com